Monday, August 26, 2013

இரசாயனக்கணித்தல்கள்

வாயுக்களின் தொடர்ச்சியற்ற தன்மை
1. கபில நிறமுடைய NO2  வாயுவை பரிசோதனைக் குழாய் ஒன்றினுள் எடுத்து
   இன்னொரு பரிசோதனைக் குழாயினால் மூடுகையில் NO2  வாயுவின்
   கபிலநிறம் அக்குழாய் முழுவதும் பரவிச் செல்வதனை அவதானிக்கலாம்.
2. கபில நிறமான Br2 வாயு வளிமண்டலத்தில் விடப்படுகையில் இலகுவாகப்
    பரவிச் செல்கிறது.
3. மணமுடைய H2S(aq) or NH3(aq) ஐ வளிக்குத் திறந்து வைக்கும் போது அதன்
    மணம் பரிசோதனைக் கூடம் முழுவதும் பரம்பலடைவதை உணரமுடியும்.
4. பலூன் ஒன்றினுள் அடைக்கப்பட்ட வாயுவை அமுக்குவதன் மூலம் அதன்
    கனவளவு குறைகிறது.

இரசாயனக்கணித்தல்கள்

திரவங்களின் தொடர்ச்சியற்ற தன்மை
1. கண்ணாடிப்பாத்திரம் ஒன்றினுள் வைக்கப்பட்ட நீரினுள் திண்மத்துணிக்கை
   ஒன்று அங்குமிங்கும் அசைதல்.
2. நீரினுள் மகரந்த மணிகளைக் கரைத்து அதன் ஒரு துளியை
   நுணுக்குக்காட்டியினூடாக அவதானிக்கையில் மகரந்த
   மணித்துணிக்கைகள் அங்குமிங்கும் அசைவதனை அவதானிக்கலாம். இது        பிறவுணியின் அசைவு எனப்படும்.
3. முற்றாகக் கலக்கும் இரு திரவங்களை ஒன்றுடன் ஒன்று சேர்க்கையில்
    கனவளவு மாற்றம் நடைபெறுகிறது
    Eg:-எதனோலும் நீரும்
4. நீரினுள் இடப்பட்ட தேன் துளி ஒன்றின் நிறம் நீரினுள் பரவிச் செல்வதை
   அவதானிக்கலாம்.

இரசாயனக்கணித்தல்கள்

திண்மங்களின் தொடர்ச்சியற்ற தன்மை
1. கலப்புலோகம் தோன்றுதல்
Eg :- செப்பு+நாகம் = பித்தளை
2. மணக்கின்ற நப்தலீன் உருண்டை படிப்படியாகத் தேய்வடைதல்
3. கதிர்த்தொழிற்பாட்டு மூலகங்களில் இருந்து வெளிவிடப்படும் 
    கதிர்த்துணிக்கைகள் பளோரொளிர்வுத் தட்டுக்களில் விட்டுவிட்டு 
    மின்னுகின்ற ஓளிர்வைத் தருகின்றது.
4. திண்மப் பளிங்கு ஒன்றின் ஊடாக X - கதிர்களைச் செலுத்தி வெளிப்படும் 
    கதிர்களை ஒளிப்படத்தாளில்(Photo Flim) படம் பிடிக்கும் போது திட்டமான    
    வடிவத்தில் அமைந்த ஒளிப்பொட்டுக்கள் தோன்றுவதை அவதானிக்கலாம்.

இரசாயனக்கணித்தல்கள்

சடப்பொருட்களின் தொடர்ச்சியற்ற தன்மை
சடப்பொருட்கள் தொடர்ச்சியானது என அரிஸ்ரோட்டில் கூறினார். எனினும் சடப்பொருட்களை எண்ணில் அடங்காதவாறு பிரிக்கமுடியும் எனக் கருதினார்.
எனிம் இதன் பின்னர் வந்த டிமோக்கிரட்டீஸ் சடப்பொருட்கள் தொடர்ச்சியற்ற மிகச்சிறிய துணிக்கைகளால் ஆக்கப்பட்டது எனக் கூறினார். இதற்கு விஞ்ஞானப் பரிசோதனைகளும் ஆதாரமாக அமைந்தன.
சடப்பொருட்களின் தொடர்ச்சியற்ற தன்மையை மூன்று வகையாகப் பிரிக்கமுடியும்
1. திண்மங்களின் தொடர்ச்சியற்ற தன்மை
2. திரவங்களின் தொடர்ச்சியற்ற தன்மை


3. வாயுக்களின் தொடர்ச்சியற்ற தன்மை

இரசாயனக்கணித்தல்கள்

அணு(Atom)
பதார்த்தமமொன்றின் இரசாயனத் தாக்கத்தில் ஈடுபடக்கூடிய மிகச்சிறிய துணிக்கை அணு எனப்படும்.

இரசாயனக்கணித்தல்கள்

கணியங்கள்
கணியங்கள் பின்வரும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
1. அடிப்படைப் பௌதீகக் கணியங்கள்
2. குறை நிரப்பு/ மிகை நிரப்புப் பௌதீகக் கணியங்கள்
3. வழிவந்த/ பெறப்பட்ட பௌதீகக் கணியங்கள்

அடிப்படைப் பௌதீகக் கணியங்கள்
அடிப்படைப் பௌதீகக் கணியங்கள் 7 உள்ளன.

குறை நிரப்பு/ மிகை நிரப்புப் பௌதீகக் கணியங்கள்
குறை நிரப்பு பௌதீகக் கணியங்கள் 2 உள்ளன.

வழிவந்த/ பெறப்பட்ட பௌதீகக் கணியங்கள்
அடிப்படை அல்லது குறைநிரப்புப் பௌதீகக் கணியங்களில் இருந்து கணித்துப் பெறப்பட்ட கணியங்கள் வழிவந்த/ பெறப்பட்ட பௌதீகக் கணியங்கள் ஆகும்.

இரசாயனக்கணித்தல்கள்

அலகுகள்(Units)
ஆரம்ப காலத்தில் வர்த்தகத்தின் பொருட்டு பல்வேறு நாடுகள் தம் நாட்டுக்குள் பல்வேறு அலகுத்தொகுதியை பயன்படுத்தி வந்தன. 
Eg:-  1. ஆபிரிக்க நாடுகளில் - cgs(சென்ரி,கிராம்,செக்கன்) அலகுத் தொகுதி 
    2. ஐரோப்பிய நாடுகளில - fks(அடி,இறாத்தல்,செக்கன்) அலகுத் தொகுதி
3. ஆசிய நாடுகளில் - சாண், முழம், காழஞ்சி போன்ற அலகுகள்
எனினும் சர்வதேச வர்த்தகத்தின்போது உள்நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த அலகுத்தொகுதிகளினால் அளவீட்டுச்சீரின்மை நிலை தோன்றியது இதனை நிவர்த்தி செய்வதற்காக 1971 ஆம் ஆண்டு பாரிஸில் கூடிய வருடாந்தப் பொதுக்கூட்டத்தின்போது நடைபெற்ற கலந்துரையாடலில்  சர்வதேச நிறைகளுக்கும், அளவீடுகளுக்குமான பணியகத்தினால் சர்வதேச வர்த்தகத்தின் போது எல்லா நாடுகளும் ஒரு பொது அளவீட்டுமுறையைப் பயன்படுத்தவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன்படி சர்வதேச அலகுத்தொகுதி ( SI Units) உருவாக்கப் பட்டது.
இதன்படி நீளம் மீற்றரிலும், திணிவு கிலோக்கிராமிலும், நேரம் செக்கனிலும் அளவிப்படுகின்றது.
இவை யாவும் மேற்கூறிய கணியங்களின் அடிப்படை அலகுகளாகும்.