Monday, February 11, 2013

இரசானக்கணித்தல்கள்


இரசானக்கணித்தல்கள்(Chemical Calculations)

பௌதீகத் தத்துவங்களை அன்றாட நடவடிக்கைகளில் பயன்படுத்தவும் இயற்கைத் தோற்றப்பாடுகளை விளக்கவும் முடியும்.
நவீன நாகரீக வளர்ச்சியில் பௌதீகவியலை எவ்வாறு பிரயோகிக்கலாம் என்பதனை கீழ்வரும் தலைப்புக்கள் மூலம் விபரித்துக் கூறமுடியும்
1. போக்குவரத்து
2. தொடர்பாடல்
3. வலு வழங்கல்
4. வைத்தியப் பிரயோகங்கள்
5. புவி மற்றும் அண்டவெளி ஆய்வுகள்

ஆரம்ப காலத்தில் வர்த்தகத்தின் பொருட்டு பல்வேறு நாடுகள் தம் நாட்டுக்குள் பல்வேறு அலகுத்தொகுதியை பயன்படுத்தி வந்தன. 
Eg:-  1. ஆபிரிக்க நாடுகளில் cgs (சென்ரி,கிராம்,செக்கன்) அலகுத் தொகுதி
    2. ஐரோப்பிய நாடுகளில fks அடி,இறாத்தல்,செக்கன்) அலகுத் தொகுதி
3. ஆசிய நாடுகளில் - சாண், முழம், காழஞ்சி போன்ற அலகுகள்

எனினும் சர்வதேச வர்த்தகத்தின்போது உள்நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த அலகுத்தொகுதிகளினால் அளவீட்டுச்சீரின்மை நிலை தோன்றியது இதனை நிவர்த்தி செய்வதற்காக 1960 ஆம் ஆண்டு ஜெனிவாவில் கூடிய வருடாந்தப் பொதுக்கூட்டத்தின்போது நடைபெற்ற கலந்துரையாடலில்  சர்வதேச நிறைகளுக்கும், அளவீடுகளுக்குமான பணியகத்தினால் சர்வதேச வர்த்தகத்தின் போது எல்லா நாடுகளும் ஒரு பொது அளவீட்டுமுறையைப் பயன்படுத்தவேண்டும் என முடிவுசெய்யப்பட்டது. இதன்படி சர்வதேச அலகுத்தொகுதி (SI Units) உருவாக்கப்பட்டது.
இதன்படி நீளம் மீற்றரிலும், திணிவு கிலோக்கிராமிலும், நேரம் செக்கனிலும் அளவிப்படுகின்றது.
இவை யாவும் மேற்கூறிய கணியங்களின் அடிப்படை அலகுகளாகும்.

கணியங்கள் பின்வரும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.

1. அடிப்படைப் பௌதீகக் கணியங்கள்
2. குறை நிரப்பு/ மிகை நிரப்புப் பௌதீகக் கணியங்கள்
3. வழிவந்த/ பெறப்பட்ட பௌதீகக் கணியங்கள்

அடிப்படைப் பௌதீகக் கணியங்கள் 
அடிப்படைப் பௌதீகக் கணியங்கள் 7 உள்ளன.


குறை நிரப்பு/ மிகை நிரப்புப் பௌதீகக் கணியங்கள்
குறை நிரப்பு பௌதீகக் கணியங்கள் 2 உள்ளன.

வழிவந்த/ பெறப்பட்ட பௌதீகக் கணியங்கள்
அடிப்படை அல்லது குறைநிரப்புப் பௌதீகக் கணியங்களில் இருந்து கணித்துப் பெறப்பட்ட கணியங்கள் வழிவந்த/ பெறப்பட்ட பௌதீகக் கணியங்கள் ஆகும்.

சிறப்புப் பெயர் கொண்ட  SI அலகுகள்

முற்சேர்க்கைகள்/ பெருக்கல் காரணி
Note :- யாதாயினும் ஒரு பௌதீகக் கணியத்தின் பெறுமானத்தை விகுதியுடன்  
           சேர்த்து எழுதும்போது அதன் குறியீட்டை SI குறியீட்டுக்கு முன்னால்  
           இடைவெளி விடாது எழுதுதல் வேண்டும்.










1 comment: