Thursday, February 28, 2013

கட்டமைப்பும் பிணைப்பும்

இரசாயனப் பிணைப்புக்கள் உருவாதல்
மூலகங்கள் உறுதிநிலை அடைவதற்காக பிணைப்புக்களை உருவாக்கு கின்றன.
இரசாயனப் பிணைப்புக்கள் தோற்றுவிக்கப்படும்போது சக்தி வெளியேறு வதனால் உருவாகும் கூறுகள் உறுதியடைகிறது.
பிணைப்புக்களைத் தோற்றுவிப்பதில் இலத்திரன் ஏற்றலோ அல்லது இழத்தலோ அல்லது பங்கீடு செய்தலோ நடைபெறுவதன் மூலம் தனது ஈற்றமைப்பை இயன்றவரை பூர்த்தி செய்கிறது இது எண்மவிதி அல்லது சடத்துவ விதி எனப்படும்.
ஆனால் இவ்விதிக்கு உட்படாத மூலக்கூறுகள் காணப்படுகின்றது.

இரசாயனப் பிணைப்பின் வகைகள்
இரசாயனப் பிணைப்புக்களில் இலத்திரன்கள் சம்பந்தப்படுகின்றதன் அடிப்படையில் பிணைப்புக்கள் பின்வரும் வகைகளாகப் பிரிக்கப்படும்.
1. பங்கீட்டு வலுப்பிணைப்பு
2. ஈதற் பிணைப்பு
3. அயன் பிணைப்பு
4. உலோகப் பிணைப்பு

இரசாயனப் பிணைப்புக்களில் இலத்திரன்கள் சம்பந்தப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள்
1. மூலக அணுவின் ஈற்றோட்டு இலத்திரன் எண்ணிக்கைக்கும் ஆனால்  
    உருவாகும் பிணைப்புக்களின் எண்ணிக்கைக்குமிடையே தொடர்பு 
    காணப்படுகின்றது.
2. நீர்க்கரைசல்களை மின்பகுக்கும் போது புதிய விளைவுகள் தோன்றுகிறது. 
    இங்கு பிணைப்புக்கள் உடைதலும் உருவாதலும் நடைபெறுகிறது.
3. மின்கலங்களின் இயக்கத்தின் போது மின் உருவாக்கப்படுகின்றது. இதன் 
    போது பிணைப்புக்கள் உடைதலும்ää உருவாதலும் நடைபெறுகிறது.

பங்கீட்டு வலுப்பிணைப்பு
ஒரு அணுவினது சோடியற்ற இலத்திரன்கள் இன்னொரு அணுவினது சோடியற்ற இலத்திரன்களுடன் பங்கிடப்பட்டு சோடியாகும் செயற்பாடே பங்கீட்டுவலுப் பிணைப்பு எனப்படுகின்றது. எனவே ஒரு அணுவில் உள்ள சோடியற்ற இலத்திரன்களின் எண்ணிக்கைக்குச் சமனான பங்கீட்டுப் பிணைப்புக்களை அவ்வாறு தோற்றுவிக்கும்.
சோடியற்ற இலத்திரன்களைக் கொண்ட அணு ஒபிற்றல்கள் மேற்பொருந்தும் வகையின் அடிப்படையில் இருவிதமான பங்கீட்டுவலுப் பிணைப்புக்கள் தோன்றுகிறது.

No comments:

Post a Comment