மின்னிறக்குழாயில் உள்ள வாயுவின் அமுக்கத்தை சாதாரண நிலையில் வைத்து உயர்ந்த அழுத்தவேறுபாட்டைப் (10000V) பிரயோகித்தபோது A மானியில் எவ்வித திரும்பலையும் காட்டவில்லை. பின்னர் வாயுவெளியகற்றும் பம்பி மூலம் வாயுவின் அமுக்கத்தை குறைத்தபோது (0.01mmHg) A மானியில் திரும்பல் ஏற்பட்டதுடன் கதோட்டிலிருந்து மெல்லியபச்சை நிறமான ஒளிர்வு தோன்றி மறைந்தததையும் Willam Crooks அவதானித்தார்.
எனவே இக்கதிர்கள் “கதோட்டுக்கதிர்கள்” (Cathode Rays) என அழைக்கப்பட்டன. கதோட்டுக்கதிர்க்குழாய்/ கதோட்டுக்கதிர்கள் என்பவற்றைக் கண்டறிந்த பெருமை Willam Crooks ஐயே சாரும்.
Note:-
1.வாயுக்கள் மிகக்குறைந்த அமுக்கத்திலும், கூடிய அழுத்தவேறுபாட்டிலும்
மின்னைக் கடத்தும்.
2.மின்னிறக்குழாயில் வாயுவின் மின்கடத்தலுக்கு உயர்ந்த
அழுத்தவேறுபாடும், குறைந்த அமுக்கமும் பயன்படுத்தப்படுகின்றமைக்கான
காரணம்.
உயர் அழுத்தத்தை பயன்படுத்தி தாழ்ந்த அமுக்கத்தில் வாயுவை இலகுவாக
அயனாக்கி மின்னைக்கடத்துவதற்கு அதாவது அமுக்கம் குறையும்போது
வாயுத்துணிக்கைகளின் எண்ணிக்கை குறைவதால் அவற்றின் சராசரிச்சக்தி
கூட்டப்படும். அதாவது தாழ் அமுக்கத்தில் ஒவ்வொரு துணிக்கையும்
கூடியளவு சக்தியைப்பெற்று அயனாக்கப்படும்.
3.மின்னிறக்கக் குழாயில் வாயுத்துணிக்கைகளின் மின்கடத்தலுக்குக்
காரணமான துணிக்கை இலத்திரன் (Electron) என “ஸ்ரோணி” (Stony) கூறினார்.
4.“J.J.தொம்சனால்” இலத்திரன்கள் பரிசோதனை ரீதியாகக் கண்டு
பிடிக்கப்படும் வரை ஒரு கருதுகோள் துணிக்கையாகவே இருந்துவந்தது.
No comments:
Post a Comment